கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!


கடலூரில் தலைமை அரசு மருத்துவமனையில் கடலூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நிருபர் செல்வமணி மகள் வயது 1. 1/2 வருண்ணியஸ்ரீ இந்த சிறு குழந்தை வீட்டில் விளையாடும் போது தலையில் அடிபட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 21ஆம் தேதி குழந்தைக்கு தலையில் இரண்டு  தையல் போடப்பட்டது


ஏழு தினங்களுக்குப் பிறகு மீண்டும் இன்று 28ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் தையல் பிரிப்பதற்காக கைக்குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது  உரிய நோயாளிக்கான ரசீது பெற்று 23வது வார்டில் தையல் டிரெஸ்ஸிங் ரூமில் தையல் பிரிப்பதற்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து அங்கு யாரும் இல்லாத பட்சத்தில் அவசர சிகிச்சை வார்டில் பணியில் இருந்த டாக்டர் மணிகண்டனை சந்தித்து குழந்தையின் நெற்றிப் பகுதியில் தையலை பிரிக்க வேண்டும் என்று கூறியபோது

இது அவசர சிகிச்சை வார்டு என்றும் ஏராளமான  செவிலியர்கள் உடன் கூலாக அமர்ந்து கதை பேசி கொண்டு தையல் பிரிக்க முடியாது அதற்கு இங்கு ஆள் கிடையாது நீங்கள் மீண்டும் 23வது வார்டு செல்லுங்கள் கூறினார் அப்பொழுது


செல்வமணி நான் செய்தியாளர் ஏன் இப்படி இரண்டு மணி நேரமாக இங்கும் அங்கும் சின்ன குழந்தையை அலைய விடுகிறீர்கள் என்று டாக்டர் மணிகண்டனிடம்  கேட்டதற்கு அருகிலிருந்த மற்றொரு மருத்துவர் தையல் பிரிப்பதற்கு வெளியே அமர்ந்திருக்கும்  காளிதாஸ் என்பவரை அழைத்து தையல் பிரிக்க அறிவுரை வழங்கினார் அதெல்லாம் என்னால முடியாது சும்மா என்னை தொல்லை பண்ணாதீங்க கோபத்தில் வந்த காளிதாஸ் இதெல்லாம் இப்போ என்னால் செய்ய முடியாது

காளிதாஸ் என்பவர் வெறுப்புடன் முணுமுணுத்தபடி கையில் வேகமாக பிளேடை எடுத்து அருகிலுள்ள கைக்குழந்தை முன் காயத்தின் நிலவரத்தை பார்க்காமல் மிக வேகமாக கோபத்துடன் முயற்சித்த போது 

அருகில் நின்ற தந்தை மிகக் கோபமாக தங்கள் தையல் பிரிக்க வேண்டாம் என்று தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்பு கொண்டபோது. +919444139000 அவர் மீட்டிங் இருப்பதாக கூறினார்பின்னர் ஹெல்த் மினிஸ்டர் தொடர்பு கொண்டபோது தொலைபேசியை 9176700000 எடுக்கவில்லை

ஆக்சிசன் நீக்கத்தால் உயிரிழப்பு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் இருந்து வரும் விபத்துகளை அவசர அவசரமாக மற்ற அருகிலுள்ள புதுவை மாநிலம் ஜிக்மர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து வருகின்றனர்


கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில்  எமர்ஜென்சி சிகிச்சைப்பரிவில் பணியாற்றும் இதுபோன்ற  தையல் பிரிக்க ஊழியர்கள் பணியாளர்கள் மருத்துவர்கள் இருந்தும்  தகுதியில்லாத மருத்துவர்களைக் கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி   

கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனைத்து அவசர சிகிச்சைகளுக்கும் உரிய மருத்துவம் பார்க்கும் வசதி இருந்தும் தகுதியற்ற அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களால் தொடர்ந்து பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டு வருகின்றனர் இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


முதல்வர் முக ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு விஷயங்களை  மக்களுக்கு பாதிக்காத வண்ணம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஹெல்த் அமைச்சர் பிறந்த ஊர் என்று அவர்கள் கடலூர் மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவர்கள் செவிலியர்கள் செய்கின்ற வேலைகளை உறுதித்தன்மை படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

மாவட்ட ஆட்சியரை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை இதுதான் மக்களுடைய நிலைமை என்றுபுகார் 1100 செய்யலாம் என்று தொடர்பு கொண்டுமுதலமைச்சரின் உதவி மையம் உங்கள் கோரிக்கை மனு எண். TN/HEALTH/CUD/I/CC/28JUL21/1455201 - HEALTH புகார் செய்யப்பட்டது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா