நூதன முறையில் மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றி வந்து தொமுசவினர் ஆர்பாட்டம்
திருப்பூர் இரயில் நிலைய முன்பாக தொமுச சார்பில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்பொது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக நூதன முறையில் மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்று வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல்,சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து தொமுச பேரவை சார்பில் திருப்பூா் இரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய மோடி அரசிற்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டது.
அப்பொது மின்சார வாரிய தொ.மு.ச நிர்வாகி ஈ.பி அ.சரவணன் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்க்கும் விதமாக நூதன முறையில் இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் , டீசல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தொமுச பேரவை பொது செயலாளர் திரு. மு.சண்முகம், எம்.பி. அவர்கள் ஏற்கெனவே அனைத்து மாவட்டங்களில் ஒரே தேதியில் நடத்த வேண்டும் எனே அறிவித்துள்ளார். அதன்படி திருப்பூா் மத்திய மாவட்ட திமுகழக செயலாளரும், திருப்பூா் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. க.செல்வராஜ் எம். எல். ஏ அவர்களின் வழிகாட்டிதலின் படி வரும் திருப்பூர் இரயில் நிலையம் முன்பாக ஒன்றிய மோடி அரசை கண்டித்து 08-07-2021 வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில் தொமுச பேரவை மாநில துணை செயலாளர் டி.கே.டி மு.நாகராசன் அவர்களின் ஆலோசனைப்படி மாவட்ட பஞ்சாலை தொமுச பொது செயலாளர் இராமதாஸ் தலைமையிலும் மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் செயலாளர் ஜீவா சிதம்பர சாமி முன்னிலையிலும் நடைபெற்று.
இதில் மாவட்ட தொமுச கவுன்சில் துணை தலைவர் ஆர். ரெங்கசாமி, மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி. அ. சரவணன், பொருளாளர் ஆனந் ,
ஜின்னிங் தொமுச ராமசந்திரன், மகேந்திரன், ஆட்டோ தொமுச துரைரவிசந்திரன், முருகன்,
பனியன் செகன்ஸ் தொமுச பீட்டர், பூபதி, மயில்சாமி, வேலுச்சாமி, ரத்திணசாமி, ராஜ்மோகன், குணசேகரன், கணேசன் , மகேஸ், சாணை ராஜா , தண்டபானி, பழனிசாமி, பாலமதேஷ், தமிழரசன், ஈ.பி. பெருமாநல்லூர் செந்தில் (எ) பழனிசாமி, ஜோதிபாசு, சேவியர், பாக்கியராஜா, அமுல்ராஜ், ஸ்ரீரங்கன், மற்றும் தொமுச பேரவை இணைப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், பொருப்பாளர்களும், மின்சார வாரிய ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும், திமுகழக நிர்வாகிகளும் பொருப்பாளர்களும் பொது மக்களும் தவறாமல் கலந்து கொண்டனர்.