தேமுதிக கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

 


ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தேமுதிக கட்சியினர் பெட்ரோல், டீசல் ,சிலிண்டர், விலை உயர்வை கண்டித்தும்  ஹைட்ரோ கார்பன் திட்டம், டாஸ்மாக் கடைகளை மூடவும் ,கட்டுமான பொருட்கள் ,மற்றும் மின்சார கட்டண உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து  தேமுதிக  கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு   தேமுதிக  மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ்  தலைமை தாங்கினார் ,இதனைத் தொடர்ந்து அவர் பேசியபோது

 திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள்  ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை 

 


பெட்ரோல்,டீசல் விலை தங்க விலையை மிஞ்சிவிட்டது இந்திய கிரிக்கெட் டீமில் கிரிக்கெட் வீரர்கள் செஞ்சுரி அடிக்கிறார்கள் பெட்ரோல் டீசல் விலை செஞ்சுரியை தாண்டிவிட்டது எனவே மத்திய மாநில அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பூட்டுதாக்கு நித்யா, மாவட்ட பொருளாளர் சரவணன், தொகுதி பொறுப்பாளர் தட்சணாமூர்த்தி, ராணிப்பேட்டை ஜமாலுதீன், விஜயகுமார்

 செயற்குழு உறுப்பினர் முரளி, மற்றும் நகர ஒன்றிய பேரூராட்சி மற்றும் கிளை கழக செயலாளர்கள் கேப்டன் மன்ற நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 பின்னர் இதனை தொடர்ந்து , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்சன்  புஷ்பராஜ்யிடம்  மாநில துணைச் செயலாளர் சுதீஷ் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்