செம்பனார்கோயில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர், வங்கி கட்டிடத்தின் அருகே மர்மமான முறையில் எரிந்த நிலையில் உயிரிழப்பு


 மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  தாலுக்கா செம்பனார்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி வருபவர் அறிவுடைநம்பி வயது 58 . இவர் இன்று காலை அறிவுடை நம்பி தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்னர் கூட்டுறவு சங்க அலுவலகம் பின்புறத்தில் அருகில் இருந்த பொதுமக்கள் சென்று பார்த்தபோது அங்கு அவர் வாயில் துணியை வைத்து அடைக்கப்பட்டு மர்மமான முறையில் உடல் முழுவதும் தீயில் ஏரிந்தபடி இறந்துள்ளார். 


தகவல் அறிந்து வந்த செம்பனார்கோவில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்யும் போது  அறிவுடைநம்பி தனது கையில் மண்ணெண்ணெய் கேனுடன் சென்றது முதல் கட்டமாக தெரியவந்தது.  தொடர்ந்து செம்பனார்கோவில் போலீசார் இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை