அகழ்வாய்வுப் பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சருமான தங்கம்தென்னரசு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டனர்.


தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெறும் அகழ்வாய்வுப் பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,  தொழிலியல் துறை  பெருமக்கள் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தொல்லியல் துறை ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் விருதுநகர்( மாவட்ட செயலாளரும்  அமைச்சருமான ) தங்கம்தென்னரசு அவர்கள்   இன்று நேரில் பார்வையிட்டனர்.

கீழடி போன்றே தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டு அடையாளமாகக் கருதவேண்டியது சிவகளை தொல் மாந்தர் வாழ்விடம்.



சிவகளை முதற்கட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற ‘ ஆதன்’ என்ற தமிழ்  எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடு, நமக்குக் கீழடியை நினைவூட்டுகிறது. ஆதிச்சநல்லூரைப் போல  செம்பினால் ஆன பொருட்களோ அல்லது தங்கத்திலான ஆன பொருட்களோ சிவகளையில் இதுவரை  கிடைக்கப் பெறவில்லை. எனினும், கருப்பு-சிவப்பு வண்ணக் கலயங்கள், குடுவைகள், பானை மூடிகள் போன்றவற்றில் அழகிய வடிவமைப்பில் வரையப்பெற்றுள்ள வெள்ளை வண்ண வேலைப்பாடுகளை நோக்கும் போது இரும்புக் காலத்தில் சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகதின் குறியீடுகள் இருக்க கூடும் என  ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)