இராணிப்பேட்டை மாவட்ட பாஜக மற்றும் இளைஞர் அணி மற்றும் பல அணிபிரிவுகள் சார்பில் கொண்டாட்டம்

 


தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன்  மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கும் , தமிழக பாஜகவின் மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டதற்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இராணிப்பேட்டை  மாவட்ட பாஜக மற்றும் இளைஞர் அணி மற்றும் பல அணிபிரிவுகள் சார்பில் வாலாஜா பஸ்நிலையத்தின் அருகில் நகராட்சி அலுவலகம் முன்பாக  பட்டாசு வெடித்து , பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடனர் 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு  அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சம்பத்,மற்றும் பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் கணேசன் ,நகர பொருளாளர் சந்தோஷ் ,நகர செயலாளர் உமாபதி, நகர பொதுச் செயலாளர் காந்தி,மகளிர் நகர தலைவர் ஹேமாவதி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முருகன்   உட்பட மாவட்ட , நகர , ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.