வடிநீர் கால்வாய் கட்டித்தர கடப்பேரி பொதுமக்கள் கோரிக்கை

 


காவேரிபாக்கம் அடுத்த கடப்பேரி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியான அண்ணா தெருவில் மழைக்காலங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து  வாழ முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாம்புகள், தவளை,  தேள் போன்ற விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் ஏறி வந்து விடுகின்றன,தண்ணீர் தேங்கி தெருவில் அப்படியே இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது .

இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்த போது மழை நேரங்களில்  தெருவில் தேங்கும்  தண்ணீர் வடிவதற்கு வடிநீர் கால்வாய் இல்லை,  என்றும், வடி நீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று முன்னாள் இருந்த தலைவர்களுக்கும் பஞ்சாயத்து கிளெர்க் மன்மதன் சங்கருக்கும் பலமுறை சொல்லியும் இதுநாள் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்,  வரி வசூல் செய்வதில், பஞ்சாயத்து சம்பந்தமான வேலைகளில் கிம்பளம் வாங்குவதில் கூறியிருக்கிறாரே தவிர மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை

 மேலும் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிப்பது இல்லை,மருந்து தெளிப்பது இல்லை,  தூய்மை பணியாளர்கள் சரிவர வேலை செய்வது கிடையாது என்றனர். 

 கடப்பேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குட்டைகள் போன்று ஆங்காங்கே தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர் இவரால் கடப்பேரி  பஞ்சாயத்து பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்றனர் 

 


இவரும் இவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சொகுசா இருக்கணும், சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமென்று நினைக்கின்றார்

இவரிடம்  மக்கள் வரி ரசீது, ஏரி வேலை சம்பந்தப்பட்ட இதர தேவைகளுக்காக அவரிடம் செல்லும்போது ஆணவமாகவும் அராஜகமாக பேசிவருகிறார்என்கின்றனர்  இவரின் போக்கு கண்டிக்கத்தக்கது என்று குற்றம் சாட்டினர் 


இதனைத் தொடர்ந்து  துறை சார்ந்த அதிகாரிகள் கடப்பேரி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தெருவில் உள்ள தண்ணீர் வெளியேற வடி நீர் கால்வாய் கட்டித் தர முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)