ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்; ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

 


ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளைத் தாண்டி பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வசூலிக்கப்படும் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏடிஎம் கார்டு என்பது இன்று அனைத்துத் தரப்பட்ட மக்களும் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. முன்பு போன்று வங்கிகளில் நின்று பணம் எடுக்கும் காலங்கள் எல்லாம் மறந்து தற்போது ஏடிஎம் மையங்களைத்தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி வங்கி நிதி மற்றும் நிதி அல்லாத பரிவரத்தனைகளுக்கான பரிமாற்றக்கட்டணத்திற்கு  ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுப்பது முதல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளான மினி ஸ்டேட்மென்ட் அச்சிடுதல்,  balance enquiry, pin change, காசோலைப் புத்தகத்திற்கு விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கும் இனி மேல் கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பண பரிவர்த்தனைக்காக வசூலிக்கப்படும் ரூ.15 பரிமாற்றக்கட்டணத்தினை மாற்று வங்கி அல்லது ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் கொடுத்து வரும் நிலையில், இக்கட்டணம் ரூ.17 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது.  மேலும் நிதி சாராத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு 5 ரூபாய் கட்டணத்திலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கி ஏடிஎம்களில் இலவச பண பரிவர்த்தனைகள் உள்ளன. ஆனால் வங்கி அனுமதிக்கும் இலவச வரம்பினைத்தாண்டி மற்றொரு ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான செலவினை வாடிக்கையாளர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.  குறிப்பாக ஒவ்வொரு மாதமும் தங்கள் டெபிட் கார்டினைப் பயன்படுத்தி அதே வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணத்தினை எடுத்துக்கொள்ளவும் அதற்கு மேல் செல்லும் பொழுதுதான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

அதே போன்று  டெபிட் கார்டின் மூலம் வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கிறோம் என்றால் மெட்ரோ நகரங்களுக்கு 3 முறையும், மெட்ரோ அல்லாத மையங்களுக்கு 5 முறை இலவச பரிவர்த்தனை செய்யக்கூடிய வசதிகள் உள்ளன. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் செல்லும்போது தற்போது ரூ. 20 கட்டணத்தினை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலித்துவருகிறது. இந்நிலையில் தான்  வருகின்ற 2022 ஆம்ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ரூ.20 லிருந்து ரூ.21 ஆக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருந்தது.

இந்த உத்தரவினைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட ஆறு மெட்ரோ இடங்களில் முதல் 3 பரிவர்த்தனைகளுக்கு இலவசமாகவும், அதற்கு மேல் இலவச வரம்பைத்தாண்டி எடுக்கும் பொழுது நிதி  பரிவர்த்தனைக்கு ரூ.20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ. 8.50 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதேபோல் எஸ்.பி.ஐ வங்கியும் ஏடிஎம்களில் இலவச பரிவரத்தனைத் தாண்டி பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)