பராக் மில்க் புட்ஸ் லிமிடெட் சார்பாக கால்நடை மருத்துவ முகாம்
காவேரிப்பாக்கம் அடுத்த பனப்பாக்கம் அருகில் வேட்டங்குளம் கிராமத்தில் பராக் மில்க் ஃபுட்ஸ் லிமிடெட்- பால் கம்பெனி சார்பாக கால்நடைகளுக்கு இலவச மூலிகை கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது, இதில் கால்நடைகளின் முக்கிய நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் கால்நடைகளுக்கு குடல் புழுக்கள் நீக்கம், சினை பிடிக்காமை, கோமாரி, வயிறு உப்பிசம் போன்ற நோய்களுக்கு மூலிகை மருந்துகள் தயாரித்து இலவசமாக கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பராக் மில்க் ஃபுட்ஸ் லிமிடெட் சார்பாக தமிழ்நாடு முதுநிலை மேலாளர் கொள்முதல் பிரிவு டி. சிவசுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு பால் குளிரூட்டும் நிலையங்களின் பொறுப்பாளர்கள் சி. வேலாயுதம், பி. கே. ஹரி, பொன்னுரங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்