சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

 


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவில் வளாகத்தில் மதுரை மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஜெ.பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் தலைமை வகித்தார். 

கூட்டத்தில் பேசிய அவர்,   நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகள் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக வெற்றியை நழுவ விட்டதாகவும் தி.நகர், தென்காசி,காட்பாடி உள்ளிட்ட தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக வெற்றியை நழுவ விட்டதாகவும் பேசினார்.

மேலும் பேசிய அவர்,  நாற்பத்தி மூன்று தொகுதிகளையும் சேர்த்து ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று திமுக வெற்றி பெற்றிருக்கிறார்கள். கட்சியினர் சோர்வடையாமல் உழைத்து ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி அமர்ந்திருப்பார் என குறிப்பிட்டார்.

அமமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்  பழனியப்பன், திமுகவில் இணைந்ததையடுத்து அமமுக என்ற கூடாரமே காலியாகிவிட்டதாக உதயகுமார் தெரிவித்தார்.  பழனியப்பன் அதிமுகவில் தான் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் எதற்காக திமுகவில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை என்றும் கூறிய உதயகுமார், அமமுகவில் இருந்து  விலகி அதிமுகவில் சேருவதற்காக வந்தால் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து அதிமுக தொண்டர்கள் வரவேற்புக் கொடுக்க வேண்டுமென பேசினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை