ஆர்.எல்.சி தொண்டு நிறுவனம் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும்,நிகழ்ச்சி
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்துநிலையம் அருகில் ஆர்எல்சி மற்றும் ராபேல் லைஃப் கேர் மருத்துவமனை நிறுவனத் தலைவர் பிஷப்.கிங்ஸ்லி தலைமையிலும்,போதகர் வின்சென்ட் ஒருங்கிணைப்பில் தமிழக முதலமைச்சரின் ஒன்றிணைவோம் வா! திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை ராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் மேலும் இந்த நிகழ்ச்சிக்கு
ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார் திமுக நகர செயலாளர் பூங்காவனம் ,டிஸ்கோ கதிர் உள்ளிட்ட திமுக கழக தொண்டர்கள் மற்றும், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.