காவேரிப்பாக்கத்தில் இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை

 


காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட  சென்னை,பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள   பேருந்து நிலையத்தில் உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது இதிலுள்ள மின் பல்புகள் செயலிழந்து மின்மினி பூச்சி போல அடித்துக் கொண்டிருக்கிறது.

 இதனைக் குறித்து அங்குள்ள இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத்தினர்  கருத்து தெரிவித்த போது காவேரிப்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள உயர் மின் விளக்கு கோபுரம் சுமார் 8 மாத காலமாக மின் பல்புகள் செயலிழந்து மின்மினிப் பூச்சியைப் போல அடித்துக் கொண்டிருக்கிறது 

மின் பல்புகள் எரியாத காரணத்தினால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது   பேருந்தில் பயணம் செய்து வந்து செல்லும்  பொது மக்கள் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் நடப்பதற்கும், நிற்பதற்கும்  பயந்து சிரமப்பட்டு வருகின்றனர்  இதனால்  ஆட்டோ சவாரி குறைந்து வருகிறது 

எந்த இடத்தில் ஆட்டோ  நிற்கிறது என்று தெரியவில்லை என்று பயணிகள் சொல்கின்றனர்   இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 200 கிராமங்கள் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு  சென்று வருவதற்கு  அனுதினமும்  பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர் மேலும் பேருந்து நிலையத்தில்  பெண்களுக்கு மூன்று கழிவறைகள்  ஆண்களுக்கு மூன்று கழிவறைகள் என்று குறைவாக கட்டியுள்ளனர்.

 இது போதாது குறைந்தது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக தலா 10 கழிப்பறைகளாவது  கட்டித்தர வேண்டும்  காவேரிப்பாக்கம் பேருந்துநிலையத்தின் அருகிலேயே மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது கொசுக்கள் உற்பத்தியாகி  கொசுக் கடியினால் நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது  

இதனை  சார்ந்த  துறை அதிகாரிகள் மழை நீரை வெளியேற்றி மக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற முன்வரவேண்டும் என்றனர் மேலும் அவர்கள்  பேசியபோது  காவேரிபாக்கம் காவல் நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஒவ்வொரு நாளும்

 காலையில் சுமார்  500க்கும் மேற்பட்ட கூலி வேலையாட்கள் கடந்து செல்கின்றனர் இதனால் மிகப்பெரிய விபத்துகள் அனுதினமும் நடந்து கொண்டே இருக்கின்றது  மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டு அமைத்து  தர துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும என்று கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்