தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மனு

  


தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுகாதார துறைகளுக்கும் யோகா விளையாட்டு துறைகளுக்கும் யோகா ஆசிரியர்களையும் யோகா பயிற்றுனர்களையும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் .MA. சுப்பிரமணியன் அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. 

அதை பெற்றுக்கொண்டு கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தார்கள் மேலும் விளையாட்டு துறை செயலாளர் உயர்திரு அபூர்வா வர்மா ஐஐஎஸ் அவர்களையும் சந்தித்து விளையாட்டு துறைகளில் யோகா பயிற்றுனர்களை நியமிக்க  வேண்டுமென மனு கொடுக்கப்பட்டது 

சுகாதாரத் துறையில் யோகா கல்வி பயின்றவர்களை பணி அமர்த்த வேண்டும் என்று  உயர்திரு செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் அவர்களை சந்தித்து ஆரம்ப சுகாதார துறையில் யோகா பயிற்றுநர்களை நியமிக்க வலியுறுத்தி நமது பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மனு கொடுக்கப்பட்டது கூடிய விரைவில் நமக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும் என்று சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றோம் 

மேலும் கூடிய விரைவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திக்க நாள் கேட்கப்பட்டுள்ளது அதுவும் கூடிய விரைவில் நடைபெறும் யோகா ஆசிரியர்கள் அனைவரும் நிர்வாகி அனைவரும் மாவட்டத்தில் கூட்டத்தை நடத்தி சென்னையில் மாபெரும் யோகாசன பிரமாண்டமான மாநாடு நடத்த அனைவரும் தயாராக இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் இவன் தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் வே. காசிநாததுரை. 

மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சுகுமார். பபிதா. வெற்றி வேல். சூரிய ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்தார்கள்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்