காவேரிபாக்கம் அருகே வழிபறியில் ஈடுபட்ட வாலிபர்கள் பிடிப்பட்டனர்


 

வாலாஜா அடுத்த காவேரிபாக்கம் பேருராட்சியை சேர்ந்த கதிரேசன் என்பவரின் மகன் தினேஷ் இவரின் உறவு முறையான கோபி ஆகிய இருவரும் நேற்றைய முன்தினம் தினேஷ் நண்பரான முத்தமிழ் என்பவருக்கு நெமிலியில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது பணபாக்கத்திலிருந்து ஓச்சேரி செல்லும் சாலையில் நங்கமங்களம் அருகே வந்து கொண்டிருந்தபோது  பைக்கில் இரண்டு நபர்கள் இவர்களைப் பின்தொடர்ந்து வந்து குறுக்கே மடக்கி இவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இவர்களிடம் இருந்த சாம்சங், ரியல்மீ 2 செல்போன்களையும் மற்றும் 500 ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடித்து சென்றனர் 

இது சம்பந்தமாக தினேஷ் காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார் நேற்று பொன்னப்பந் தாங்கள் கூட்ரோட்டில் காவேரிபாக்கம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் சீதா, மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது பல்சர் பைக்கில் வந்த 2   வாலிபர்களை மடக்கி சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் இவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அரக்கோணம் கும்பினி பேட்டையைச் சேர்ந்த பாபு, பனப்பாக்கம் காலனியை சேர்ந்த பிரசாந்த் என்பது தெரியவந்தது இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.