குட்கா விற்றால் இதுதான் கதி; தண்டனையை பட்டியலிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை!


 தமிழ்நாட்டிலுள்ள எந்த கடைகளிலும் தடைச்செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல் முறை நோட்டீஸ் இரண்டாவது முறை அபராதம் அடுத்ததாக சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வியாபாரிகளை மாவட்டம் தோறும் ஒன்றிணைத்து உறுதிமொழியை எடுக்க வைக்கவேண்டும். மாணவர்கள் மத்தியில் அதிகப் புழக்கம் இருப்பதால் கல்லூரி மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஆங்காங்கே மாவட்டத்திற்கு 50 இடங்களில் நிரந்தரமாக வைக்க நடவடிக்கைகள்.

புகையிலை ஒழிப்பு தினத்தன்று முழுமையாக புகையிலை ஒழிப்பு செய்த மாவட்டங்களுக்கு முதல்வர் மூலமாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்களில் புகையிலை தொடர்பான நிறுவனங்களின் பெயர் இருந்தால் அதை தவிர்த்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற வழிவகைச் செய்யப்படும்.

கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் மாவட்டங்களில் அதிகாரிகள் மீது விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இரண்டு மாதங்களில் புகையிலை குட்கா பொருட்களை கட்டுப்படுத்த முழு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இரயிலில் எடுத்து வந்ததாலும் தெரிய வரும் பட்சத்தில் புகார் அளிப்பவர்கள் விபரம் வெளியே தெரிவிக்கப்படாது.

94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் அனுப்பலாம். புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மட்டுமல்லாமல் எங்கிருந்து வருகிறது என தெரியும் பட்சத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக வியாபாரிகள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது அவர்களும் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்தனர்.