மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பெண் முதியவர் உயிரிழந்தார்

 


வாலாஜா அடுத்த கிழ்மினல் கிராமம் ரோட்டு தெருவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவி சாரதா வயது 60 இவர் நேற்று 08.07.21காலையில் சுமார் ஒன்பது மணி அளவில் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய பேரப் பிள்ளைகளை அழைத்து ரோட்டில் செல்ல வேண்டாம் உள்ளே வாருங்கள் என்று சொல்லி வீட்டுக்குள் அனுப்பி கேட்டை மூடினார்

 இந்த நிலையில் அவர்களின் வீட்டிற்கு மேலே செல்லும் உயர் மின் அழுத்த கம்பி எதிர்பாராதவிதமாக  திடீரென்று தானாகவே அருந்து அவரின் தலையில் சுற்றிக் கொண்டதால்  தலைமுடி மற்றும் முகம்  தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்அதிர்ஷ்டவசமாக பேரப்பிள்ளைகள் உயிர்தப்பினர்

 


பின்னர் தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர்கள் மற்றும் வட்டாட்சியர் ஜெயச்சந்திரன்  நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார் ரத்தனகிரி காவல்துறையினர் சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்  சோகத்தையும் ஏற்படுத்தியது.