ஆட்சி மாறியது அரும்பாக்கம் ஆதிதிராவிட கிராம மக்களின் அவல நிலை மாறவில்லை

 


ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு நியாயவிலைக் கடை பிரித்து தரக்கோரி பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வந்தும் இது நாள் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த கிராமத்தைச் சேர்ந்த சுள்ளி என்பவரின் மகன் ஆனந்தன் என்பவர்

  ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக  நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் அரும்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு நியாயவிலைக்கடை பிரித்து தந்து, கட்டடம் கட்டி தர மனு கொடுத்திருந்தார் மனு எண் 285132 ஆனால் இதுநாள் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்தபோது

 


ஆதிதிராவிட பகுதிக்கும் ஜாதி இந்துக்கள் வாழும் பகுதிக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது, சாதி இந்துக்கள் பகுதியில்தான் ரேஷன் கடை உள்ளது காலம் காலமாக மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்துதான் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கிறோம் கழனி காடு வழியாக சென்றால் ஒன்றரை கிலோமீட்டர் பொருட்கள் வாங்கிக் கொண்டு வரும் போது குண்டு, குழி, பள்ளம் ,மேடு வரப்பு கிணறு போன்ற பகுதிகளை கடந்து வரும்போது கீழ விழுந்து பொருட்கள் சேதமாகிறதுகிறது மீதமுள்ள பொருட்களை மட்டுமே எடுத்து வர வேண்டிய அவலநிலை உள்ளது, பல ஆண்டுகளாக ரேஷன் கடை பிரித்து தந்து உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம் இதுநாள் வரையிலும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை உங்கள் தொகுதியில் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என்றும்

 எனது அரசின் முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும் என்றும் இதற்கு நான் பொறுப்பு முதல்வர்  ஸ்டாலின் அறிக்கை விட்டிருந்தார்  இந்த உறுதிமொழி எங்கே எங்கள் கிராமத்திற்கு விடிவு வராதா என்று புலம்பின அவர் நான் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு நியாயவிலைக்கடை பிரித்து  தந்து கட்டிடம் கட்டி தர முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)