மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் கட்டிட பணியினை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏவா.வேலு ஆய்வு செய்தார்

 


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் கட்டிட பணியினை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் 

ஏவா.வேலு ஆய்வு செய்தார்   ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து  பேசியபோது ராணிப்பேட்டையில் 118 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது இதேபோல் திருப்பத்தூர் இடம் கட்டப்பட்டு வருகிறது

 


அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்பாலும் நேரடி பார்வை நிர்வாகத்தாலும் கட்டிடப் பணிகள் அதி விரைவாக நடைபெற்று வருகிறது முதலமைச்சர் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக ஆர் காந்தி இடம் பெற்றிருக்கிறார் இவரின் சொந்த தொகுதி, சொந்த ஊர் ராணிப்பேட்டை  ஒப்பந்ததாரர்களை தவிர்த்தும் நேரடி உதவி செய்து பணி விரைந்து முடிக்க செயல்பட்டு வருகிறார்

 மேலும் புதிய தொழில் முறையை கையாண்டு கட்டடம் கட்டப்பட்ட வருவதால் விரைந்து முடிக்கப்படும் என்று நம்புகிறேன் மேலும் இந்த வளாகத்தில் புகார் தெரிவிப்பதற்காக வரும் மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பூங்காக்கள் அமைந்து செயல்படும் 


மேலும் அவர் கூறியபோது வள்ளுவர் கோட்டம் ஆய்வுசெய்து சீரமைக்கும் பணி விரைவில் நடைபெற இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் வள்ளுவர் கோட்டம் பாழடைந்துபோனது

 கலைஞர் ஆட்சியில் ஏழைகளுக்கு ஒரு கல்வி பணக்காரனுக்கு ஒரு கல்வி இருக்கக்கூடாது என்று சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தார் இந்த கல்வி திட்டத்தின் மூலம் கிராமத்து பிள்ளைகளும் மருத்துவர்களாக மாறினர் 

ஆனால் 2011 இல் ஆட்சியில் இருந்த அம்மாவின் காலத்தில் தமிழ் புத்தகத்தில் இருந்த வள்ளுவரின் படத்தை இரவோடு இரவாக கிழித்து எறிந்தனர் வள்ளுவர் என்ன? திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரா? திருவள்ளுவர் எல்லாருக்கும் பொதுவானவர் எனவே அவரின் நினைவாக வள்ளுவரின் கோட்டம் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும்

 மேலும் அவர் பேசிய போது தமிழகம் முழுவதும் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியினை, திட்ட மதிப்பீடு செய்து மூன்று நாட்களுக்கு முன்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் மூலம் அனுப்பி உள்ளோம் தேவைப்பட்டால் நேரடியாகச் சென்று முறையிட இருக்கின்றோம் மதுரையில் கட்ட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை பற்றிஅவர் கூறும்போது விரைந்து செயல்பட வலியுறுத்தியுள்ளோம் என்றார் 

 மேலும் அவர் கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை பற்றி பேசும்போது ஜிஎஸ்டி வரியால் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து விட்டது உண்மைதான், தமிழகத்தில் இருக்கிற ஒப்பந்த தொழிலாளர்களை எல்லாம் வரவழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்து அவர்களின் கோரிக்கைகளை வாங்கி மூன்று தலைமைப் பொறியாளர் கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்து முதலமைச்சரின் கண்ணோட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் 


மேலும் மதுரையில் ஜூன் மூன்றாம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பின்படி எட்டடுக்கு  நூலகம் கட்டிடம் கட்ட எனது தலைமையில் துறைசார்ந்த பொறியாளர்கள் உடன் சென்று 6 இடங்களை ஆய்வு செய்தோம் அதில் மூன்று இடங்களை ரத்து செய்து மூன்று இடங்களை தேர்வு செய்து இருக்கின்றோம் அதற்குரிய வரைபடம்  உட்பட அதற்கான  திட்ட அறிக்கையை முதலமைச்சருக்கு சமர்ப்பித்து இருக்கிறோம் விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

அதனைத் தொடர்ந்து கட்டிட வளாகத்திற்குள்   அமைச்சர் ஏவா.வேலு மற்றும் அமைச்சர் ஆர் காந்திமரக்கன்றுகளை நட்டனர்  மேலும் இந்த நிகழ்வின்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ,மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாட்சன் புஷ்பராஜ் பொதுப்பணி துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)