ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 


ராணிப்பேட்டை முட்டுக்கட்டை பேருந்து நிலையத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்த்திய மத்திய பாஜக அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம்,ராணிப்பேட்டை நகர தலைவர்   வழக்கறிஞர் அண்ணாதுரை  தலைமை தாங்கினர்

 


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராமச்சந்திரன் மற்றும்  சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அரசு மருத்துவக் குழு உறுப்பினருமான  முனிரத்தினம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய நகர, கிளை கழக பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .