சட்ட விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி: அரக்கோணம் டிஎஸ்பி தகல்
சட்ட விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே எனது முக்கிய பணியாக இருக்கும் என்று அரக்கோணத்தின் புதிய டிஎஸ்பியாக வெள்ளிக்கிழமையன்று பொறுப்பேற்ற புகழேந்தி கணேஷ் தெரிவித்தாா். இங்கு ஏற்கெனவே டிஎஸ்பியாக இருந்த மனோகரன் வேலூர் மாநகர டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த புகழேந்தி கணேஷ் அரக்கோணத்துக்கு மாற்றப்பட்டாா். இதனைத் தொடா்ந்து, அரக்கோணம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட புகழேந்தி செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகையில் அரக்கோணம் உட்கோட்டத்தில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறாமல் தடுத்து, முற்றுப்புள்ளி வைப்பதே எனது முக்கிய பணியாக இருக்கும்.
மேலும் அரக்கோணம் நகரில் போக்குவரத்து நெருக்கடிகளைத் தீா்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.