கட்சியில் இருந்து அதிரடி நீக்கம் : அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
சசிகலாவிடம் பேசினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்று புதுக்கோட்டை மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக அலுவலகத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலாளர்களான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ, பி.கே.வைரமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அதிமுக வெற்றிக்காக பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் ஆலோசனையின் படி செயல்படுவது, சசிகலாவிடம் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் பேசி, கட்சியின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் அதிமுகவினரைக் கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கடந்த சில நாட்களாக அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா பேசிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.