தொல்லை தரும் எலி : டாஸ்மாக் கடையில் ஒயின் குடித்த எலிகளால் அதிர்ச்சி!!

 


நீலகிரி : டாஸ்மாக் கடையில் புகுங்த எலிகள் ஒயின் பாட்டில்களின் மூடிகளை கடித்து குதறி ஒயின் குடித்துள்ள சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அதிகரிப்பால் டாஸ்மாக் கடைகள் மூட அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொற்று குறைந்ததால் இன்று முதல் எஞ்சிய 11 மாவட்டங்களிலும் டாஸ்மாக் திறக்க அனுமதிக்கப்பட்டமு. இதையடுத்து நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காளம்புழா பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை திறந்து போது எலிகள் அங்குள்ள ஒயின் பாட்டில்களின் மூடியை கடித்து ஒயின் குடித்துள்ளது தெரியவந்துள்ளது.

இன்று காலை கடையை திறந்த போது பாட்டில்கள் சரிந்து கிடப்பதை பார்த்து சோதனை செய்துள்ளனர். கடையின் உள்ளே ராக்கில்  அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒயின் பாட்டில்களை மூடியைக் கடித்து கீழே தள்ளி அவற்றை குடித்துள்ளதாகவும் 12 பாட்டில்கள் சேதமடைந்துள்ளதாகவும் இவற்றின் மதிப்பு ரூபாய் ₹20 ஆயிரம் எனவும் கடை ஊழியர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மதுபானக் கடையில் புகுந்து எலிகள் ஒயின் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)