ஓ.பன்னீர்செல்வம்"மகனை அமைச்சராக்கவே ஒன்றிய அரசு என கூறுவதை விமர்சிக்கிறார்": டி.கே.எஸ் இளங்கோவன் சாடல்!
மகனை அமைச்சராக்கும் நோக்கில்தான் ஒன்றிய அரசு என கூறுவதை ஓ.பன்னீர்செல்வம் விமர்சிப்பதாக தி.மு.க செய்தி தொடர்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.ஸ் இளங்கோவன்,"மகனை அமைச்சராக்கும் நோக்கில்தான் ஒன்றிய அரசு என கூறுவதை ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்து வருகிறார். ஒன்றியம் என்பது ஒற்றுமையைக் குறிக்கும் சொல். அரசியலமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசு என கூறுவதில் தவறில்லை.
ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு ஓபிஎஸ் விமர்சனம் செய்வது பா.ஜ.கவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவர் மகனை எப்படியாவது மந்திரி ஆக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.