தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை.. விண்ணப்பிக்க, தகவல்கள் இங்கே..!

 


தமிழ்நாடு ஊரக மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் பணிபுரிவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தற்பொழுது சாலை மற்றும் பாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்தப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை தமிழ்நாடு ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை தற்பொழுது  அறிவித்துள்ளது. 

State quality moniters (road) என்ற இந்த பணியிடங்களுக்கான தகுதியும், விருப்பமும் உள்ளர்வளின் விவரங்களை ஜூலை 30-ஆம் தேதிக்குள் தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான கல்வித்தகுதி என்ன? எவ்வளவு மாத வருமானம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில்  State quality moniters (road) என்பதற்குக் கீழ் பணிபுரிய வேண்டும் எனில் அவர் அங்கீகரிக்கப்பட்டப் பல்கலைக்கழகத்தில B.tech, சிவில் மற்றும் மெக்கானிக் இன்ஜினியர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், முன்னதாக சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில்  அரசு மேற்கொண்டப் பணிகளில் பணியாற்றியுள்ளதோடு 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தகுதியினைக்கொண்டவர்கள்  65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், தினசரி ரூ.3000 ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் https://tnrd.gov.in/pdf/Terms%20and%20Conditions%20correct.pdf என்ற பக்கத்தில் கூடுதல் விபரங்களை தெரிந்துக்கொண்டு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு எந்தக் கட்டணம் கிடையாது எனவும்  வேலை வாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி உடையவர்கள் எப்படி விண்ணப்பிப்பது?தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் பணிபுரிவதற்கான ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், Tnrd.gov.in என்ற அதிகாரப்புர்வ தளத்திற்கு செல்ல வேண்டும். இதில் experience of interest for state quality monitors ( road) என்பதனை கிளிக் செய்து இதில் உள்ள விபரங்களை எல்லாம் முழுமையாக படித்துக்கொள்ள வெண்டும். பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் application form என்பதனை டவுன் செய்துக்கொள்ள வேண்டும்.                                                               முக்கியமாக அந்த விண்ணப்பத்தில், பெயர், பிறந்த தேதி, அரசு அலுவலகத்தில் பணிபுரிந்த விபரங்கள், அரசு ஊழியராக இருந்தபொழுது மேற்கொண்ட சாலை,பாலம், தேசிய நெடுஞ்சாலைப் போன்றவற்றின் தகவல்கள் உள்பட அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி  செய்து புகைப்படத்துடன் விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.இதனையடுத்து விண்ணப்பத்தின் அடிப்படையில் தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுக்கும் முடிவுகள் இறுதியானதாக அமையும் எனவும், இதில் மாற்றம் செய்யப்பட மாட்டாது எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)