காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் ஓய்வு தருவது கட்டாயமாக்கப்பட வேண்டும் மற்றும் திருமணம் மற்றும் பிறந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்

 



தமிழ்நாட்டில் போலீசாருக்கு வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்; உடல்நலம், குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கு வாரம் ஒருநாள் விடுப்பு தர வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டுமென்பது, அத்துறையாளர்களின் பல நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. ஓயாமல் பணியாற்றி வரும் காவலர்களுக்கு, சில காவல்துறை நிலையங்களில் மட்டும் அந்ததந்த எஸ்.பியின் அனுமதியின் பேரில் சிறப்பு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், காவலர்களுக்கு வாரவிடுப்பு, சிறப்பு நாட்களில் விடுமுறை ஆகியவை அளிக்கப்பட்டதற்கு காவல்துறையில் பணியாற்றுபவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும். 

காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும். தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட/ மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)