வாகன திருட்டில் ஈடுபடும் நபர்கள் கைது


 ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வாகன திருட்டில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் பொருட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில்

 இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சாலமன் ராஜா மற்றும் உதவி ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

 இதில் இராணிப்பேட்டை உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் பல்வேறு வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த நபர்களான 1) ஷகீல் வ/29 த/பெ அன்வர், கொசபேட்டை, வேலூர் 2) பியாஸ் வ/22 த/பெ சுல்தான் வேலூர் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார், ரூ.4,80,000 மதிப்புள்ள 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு

 திருட்டில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.