வாலாஜாபேட்டையில் திருமணமான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 
 வாலாஜாபேட்டை கச்சல நாயக்கர் தெருவில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மகன் நித்திஷ் குமார் வயது 22 இவருக்கு திருமணமாகி சுமார் ஒரு வருட காலமாகின்றது இவர்களுக்கு 4 மாதமான ஒரு கைக்குழந்தை உள்ளது 

   இந்த நிலையில் நிதிஷ்குமார் காலையிலேயே மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்திருந்தார் அவருடைய மனைவி காலையிலே குடித்து வந்து விட்டீர்களே என்று தனக்கான பாணியில் திட்டியிருக்கின்றார்  இதனைப் பொறுக்க முடியாத நிதிஷ்குமார்  பெருமளவில் மன உளைச்சலுக்குள்ளாகி  வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின்விசிறியில்   துணியால் தூக்குப்போட்டு தற்கொலை  கொண்டார் 

 இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் நிதிஷ்குமார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி வைத்தனர் மேலும்  இந்த சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை  ஏற்படுத்தியது..