இரண்டு சிறு பெண் பிள்ளைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

 கலவை அடுத்த செங்கனாவரம் கிராமம் மூதா கோவில் தெருவைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவரின் மகள் 11 வயது சிறுமி கல்பனா, அதே கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகள் கீர்த்தி வயது 8, இருவரும் செங்கனாவரம்

ஆதிதிராவிடர் அரசு நடுநிலைப் பள்ளியில் கல்பனா  ஐந்தாம் வகுப்பும், கீர்த்தி நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர்

 இவர்கள் இருவரும் கடந்த 14.07.21அன்று சுமார் மாலை 4 மணி அளவில் பிச்சாங் குட்டையில் குளிப்பதற்காக துணிகளை கழற்றி வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கி மூழ்கிவிட்டனர் தகவலறிந்த பெற்றோர்களும் பொதுமக்களும் ஓடி வந்து தண்ணீரில் இறங்கி பிள்ளைகளைத் தேடி கண்டுபிடித்து கரைக்கு கொண்டு வந்த போது பிள்ளைகள் இறந்து கிடந்தனர் சம்பவம் அறிந்த கலவை போலீசார் சிறுபிள்ளைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

 மேலும் இந்த சம்பவத்தை குறித்து கலவைப் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகப்பெரிய துயரம் ஏற்பட்டது

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு