அதிமுக வாலாஜா கிழக்கு மற்றும் நகர கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

 அதிமுக  வாலாஜா கிழக்கு மற்றும் நகர கழக செயல் வீரர்கள்  ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், கழகப் பொன்விழா, மற்றும் கழக அமைப்புத் தேர்தல் குறித்த ஆலோசனைக்  நடைபெற்றது ஒன்றிய கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் நகர ஆலோசனைக் கூட்டத்திற்கு நகர செயலாளர்  ஜி.மோகன் தலைமை தாங்கினார்  

 இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக   தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி கலந்துகொண்டு   ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார் அருகில்  எஸ்.எம். சுகுமார் மற்றும் முக்கிய கழகத் தோழர்கள் உடனிருந்தனர்  

மேலும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அரக்கோணம் சட்டமன்ற வேட்பாளராக ரவி 

பிஏ.பிஎல், அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி வாய்ப்பை  தேடித்தந்த  அரக்கோணம் தொகுதி வாக்காளர் மக்களுக்கு நன்றியினை தெரிவித்தும்

 அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி  அவர்களை முன்னாள்  முதல்வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்  அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணை கொரடாவாக  நியமித்தமைக்கு  ஓபிஎஸ் அவர்களுக்கும்  துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தும்

 முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் மீது பொய் வழக்குப்  போடும் திமுக அரசனை வன்மையாக கண்டித்தும்

 நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரை விட நமது ராணிப்பேட்டை கழக வேட்பாளர் எஸ்எம்.சுகுமார் அவர்கள் வாலாஜா நகராட்சியில் மட்டும் 904 ஓட்டுக்கள் அதிகமாக வாங்க வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தும் 

 நமது கழகத்திற்கு துரோகங்களை விளைவித்த   சசிகலாவை எக்காரணத்தைக் கொண்டும்  அதிமுக நமது இயக்கத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என இத்தீர்மானத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்என்றும் 

 நான் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை 5 ரூபாயும் டீசல் விலையை நான்கு ரூபாயும் குறைப்பேன் என பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாத திமுக தலைவர் ஸ்டாலினை வன்மையாக கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன