ராணிப்பேட்டை காந்தி சாலை காவல்நிலைய வளாகத்தின் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் துர்நாற்றம் வீசி வருகிறது


ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்டகாந்தி சாலையிலுள்ள, காவல் நிலைய வளாகத்தில், நகரக் காவல் நிலையம், வட்டாரப் போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது  இந்த வளாகத்தின் நுழைவாயில் அருகில் கழிவுநீர் கால்வாய் இருக்கிறது  காவல்நிலைய வளாகத்தின் அருகே இறைச்சி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது அங்கு மீன், கோழி, ஆட்டு இறைச்சி வெட்டி விற்பனை செய்து வருவதால் அங்குள்ள கழிவு நீர்கள், காவல் நிலையம் அருகே உள்ள கால்வாயில் ஓடுகிறது, 

இதனால் காவல் நிலைய  வளாகத்திற்குள செல்லமுடியாமல் மிகப்பெரிய துர்நாற்றம் வீசி வருகிறது 


இதுகுறித்து அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தபோது காவல் நிலைய வளாகத்திற்குள்ளே நுழையவே! முடியவில்லை குடலைப் பிடுங்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது, மயக்கமே வந்து விடும் போல் இருக்கிறது, இங்கு ஒரு மணி நேரம் இருந்தால் சுவாசக் கோளாறுகள் கட்டாயம் ஏற்பட்டு விடும்,  இங்கு பணிபுரியும் காவலர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை  


காவல் நிலைய வளாகத்திற்கு வந்து செல்லும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு கால்வாயை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து, துர்நாற்றம் வீசாதபடிக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர, நகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கோரிக்கை வைத்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்