நடிகை ஷனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ்கள் - சைபர் க்ரைம் போலீசிடம் சிக்கிய கல்லூரி மாணவர்

 


நடிகை ஷனம் ஷெட்டிக்கு சமூகவலைதளம் மூலம் ஆபாச மெசேஜ்களை அனுப்பிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் நடித்து வருபவர் ஷனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கூடுதலாக பிரபலமடைந்தார். சமூகவலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷனம் ஷெட்டி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரை ஏராளமானோர் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர்.

    இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.      இதுதொடர்பாக உரிய ஆதாரங்களையும் போலீசாரிடம் அவர் வழங்கினார்.  
    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அடையாறு சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான் பால் (21) என்பவரை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். தற்போது திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்