ஆற்காட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரணத்தைக் கண்டித்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலியாஸ் இமாம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர் மாவட்ட பொறுப்பாளர் தக்கோலம் தமீன் கண்டன உரையாற்றினார் அவர் பேசியபோது
யாரெல்லாம் சமூக நீதிக்காகப் போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் மத்திய மோடி அரசு தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறது.ரிலையன்ஸ் நிறுவனமான அதானி,அம்பானி போன்ற பணக்காரர்களுக்கு துணை போகிறது ஸ்டான் சுவாமி பெங்களூரிலுள்ள ஜேசுயிட் நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார் பழங்குடி மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டிற்காகவும் பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட பழங்குடியினர் ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என்று சுவாமி குரல் கொடுத்தார்.
இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார் பழங்குடியினர் கிராம பஞ்சாயத்து விரிவாக்க சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் ஜார்கண்ட் மாநிலத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தார், பச்சைப் பேட்டி போராட்டத்தில் கலந்து கொண்டார்
இவரின் லேப்டாப்பில் தோழர் என்கிற வார்த்தை உள்ளது எனவே 2018 ஆம் ஆண்டு பீமா கோரேகான் வன்முறை மற்றும் இந்திய பொதுவுடமைக் கட்சி மாவோயியம் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர் என்று குற்றம் சாட்டி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சுவாமி தனது இயேசு சபை சகாவுக்கு எழுதிய கடிதத்தில் கைதிகளின் அவல நிலையை எடுத்துரைத்தார்.
இங்கு அடைக்கப்பட்டுள்ள பல ஏழைகளுக்கு அவர் மீது என்ன குற்றம் சாட்டியுள்ளனர் என்று கூட தெரியவில்லை அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை கூட அவர்கள் பார்க்கவில்லை அப்படியே சிறையில் எந்த ஒரு சட்ட உதவியும் இல்லாமல் பல ஆண்டுகளாக இருக்கிறார்கள் ஆனால் நாங்கள் குழுவாக இன்னும் பாடுபடுவோம் ஒரு கூண்டு பறவை இன்னும் பாடலாம் என்ற கடிதத்தை எழுதினார்
இவரை விடுவிக்க சிறுபான்மை சமூக நல தலைவர்கள் பலர் போராடி வந்தனர் 84 வயதான இவர் இவரின் ஜாமின் 2020-ல் ஐஎன்ஏ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
இதனால் இவருடைய உடல்நிலை மோசமடைந்து மும்பையில் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஜூலை 5ஆம் தேதி இறந்துவிட்டார் இவரின் மரணம் மிகப்பெரிய இழப்பு மத்திய அரசின் குற்றச்சாட்டு மிகவும் கண்டிக்கத்தக்கது என்று பேசி முடித்தார்.