தன்வந்திரி பீடத்தில் பஞ்சமுக வாராஹி ஆலயத்தில் இன்று வாராகி நவராத்திரி துவங்கியது.

 


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆனி அமாவாசை வெள்ளிக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் சகல விதமான நோய்களலிருந்து நிவாரணம் பெறவும்இயற்கை வளம் பெறவும், மண்வளம், மழை வளம் பெறவும், திருஷ்டி தோஷங்கள் அகலவும்,ஐஸ்வரியம்பெருகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருமணத்தடைகள்விலகவும், திருமணம் நடைபெறவும் சர்ப சூலினி, மகா பிரத்தியங்கராதேவி யாகமும், நிகும்பல யாகமும், மிளகாய் நவதானியங்கள்,பல்வேறு வகையான மூலிகைகள், 

மஞ்சள், குங்குமம், பூசணிக்காய் போன்ற பொருட்களைக் கொண்டு திஷ்டி யாகமிகவும் நடைபெற்றதுஅதனைத் தொடர்ந்து வராகி நவராத்திரி ஆஷாட நவராத்திரி வைபவம் இன்று மகா கணபதி யாகத்துடன் துவங்கியது

பிரபஞ்சத்திலேயே தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மட்டுமே ஐந்துமுக வாராகி பிரதிஷ்டை செய்து வராகி நவராத்திரி வைபவம் இன்று  துவங்கியது

இந்த வாராகி நவராத்திரி இன்று முதல் வருகின்ற 19.7.2021 வரை பலவிதமான கிழங்குகளை கொண்டு வாழ்வில் மக்கள் அனைவரும் நலம் பெற தினசரி வாராகி ஹோமம் 1000 நாம அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.மேலும்

14.07.21 புதன்கிழமை வராஹி பஞ்சமி முன்னிட்டு ஆயிரம் தாமரை மலர்கள் யாகம் செய்து, ஆயிரம் நெய் தீபங்கள் ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்