நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

 


சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ, எல்.ஆர்.பார்ம்ஸ் சாலையில் உள்ள சுகுணா கார்டன் என்கிற சொகுசு பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த சொகுசு பண்ணை வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு ஆண்கள், பெண்கள் என 30- க்கும் மேற்பட்டோர், கலந்துகொண்ட மது விருந்து நடைபெற்று வருவதாக கானத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இது குறித்து தகவலின் பேரில், கானத்தூர் காவல் துறையினர் சென்றபோது அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் மது விருந்து நடைபெற்று கொண்டிருந்ததை கானத்தூர் காவல் துறையினர் உறுதி செய்தனர். 

அங்கு ஆண்கள் மற்றும் பெண்கள்  மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து நடனமாடி கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மது விருந்தை தடுத்து நிறுத்தினர். மேலும், மது விருந்து நடத்திக்கொண்டு இருந்தவர்களிடம்  விசாரணை நடத்தியதில், அங்கிருந்த பெண் ஒருவர் இந்த மது விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது. மேலும், மது விருந்துக்கு  சினிமா நடிகை கவிதா ஸ்ரீ  மற்றும் ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஜித்குமார் (34) என்பவருடன் இணைந்து இந்த இரவு நேர மது விருந்து பார்ட்டியை ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து  காவல்துறையினர்,  இந்த மது விருந்து பார்ட்டியில் நடனமாடிய  பெண்களை மற்றும் நடிகை கவிதா ஸ்ரீ உடன் சேர்த்து மொத்தம் 16 பேரையும் கடுமையாக எச்சரிக்கை செய்து பண்ணை வீட்டிலிருந்து அனுப்பி உள்ளனர். மேலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மது விருந்தில் கலந்து கொள்வதற்கு,  ஆண் ஒருவருக்கு ரூ. 10,000 வரை கட்டணம் வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்தது.


பின்னர், அங்கிருந்த ஸ்ரீ ஜித்குமார் உள்ளிட்ட 15 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து, அவர்கள் மீது ஊரடங்கின்போது அரசு உத்தரவை மீறியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பன்ணை வீட்டில் மது விருந்து நடத்தியது என 4 பிரிவின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து கானத்தூர் கிராம நிர்வாக அதிகாரி கலை செல்விக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி நேற்று பன்ணை வீட்டை பூட்டி சீல் வைத்தார். இந்த சம்பவம் குறித்து மேலும் கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இடத்தில் உண்மையாக மது விருந்து தான் நடைபெற்றதா அல்லது வேறு ஏதாவது சமூக விரோதச் செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!