அதிமுக சட்டப்பேரவை துணை கொறடா சு. ரவி எம் எல் ஏ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

 கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் வாரிசுதாரர்களிடம் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதாக சான்று கேட்கப்படாமல் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என அதிமுக சட்டப்பேரவை துணை கொறடா சு. ரவி எம் எல் ஏ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக சட்ட பேரவை துணை கொறடா சு. ரவி எம் எல் ஏ மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜை நேரில் சந்தித்து ஆலோசனையை மேற்கொண்டார்

செய்தியாளர்களிடம் தெரிவித்த போது. ;

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோ வேக்சின் தடுப்பு மருந்து தட்டுப்பாடாக இருப்பதை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருப்பதாகவும் உடனடியாக கோ வேக்சின் மருந்துகளை மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். 

மேலும் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை ஆகிய இருவர் உயிரிழந்திருக்கும் பட்சத்தில் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் அல்லது தாய் தந்தை ஆகியவர்களில் ஒருவர் உயிரிழந்திருந்தால் மூன்று லட்ச ரூபாய் வாரிசுதாரர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது

பெற்றோர்களை இழந்து தவித்து வரும் பிள்ளைகளிடம் நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென்றால் வறுமை கோட்டுக்கு கீழ் சான்று உள்ளதாக வழங்கவேண்டுமென அரசு அதிகாரிகள் தெரிவிப்பதால் வறுமைக்கோட்டுக்கு கீழ் சான்று பெறமுடியாமல் பெற்றோரை இழந்து தவிக்கும் வாரிசுதாரர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தார் வறுமைக்கோட்டுக்கு கீழ் சான்று இல்லாமலே உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகையை அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கையாக கேட்டுக்கொண்டார் இதில் மாவட்ட பொருளாளர் சாபுதின் மாவட்ட அவைத்தலைவர் நந்தகுமார் நகர செயலாளர் கே பி சுந்தரம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் அதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்