இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டைமுத்துக்கடை பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவலன் தலைமை வகித்தார் வாலாஜா தாலுக்கா குழு செயலாளர் கார்த்திக் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் கண்டன உரையாற்றினார் மேலும் இதில் குமார் தேவராஜ் இந்திரகுமார் நவீன்குமார் சேட்டு சத்தியமூர்த்தி செந்தில்குமார்
மற்றும் பலர் பங்கேற்று ஒன்றிய மோடி அரசை கண்டித்து திருமண உதவி திட்டம் வறுமையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கிடவும் மற்றும் ரயிலில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் பெண்கள், மாணவர்கள், மற்றும் முதியவர்களுக்கும் அனைத்து சலுகைகள் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.