வாலாஜாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சர் லாரி கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழந்தார்
ஆந்திர மாநிலம் சிக்பாலாபூர் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வத்தப்பா மகன் ராமாஞ்ஜன் அப்பா வயது 34 என்பவர் முள்பாக்கள் என்ற இடத்திலிருந்து ஈச்சர் லாரியில் சென்னைக்கு கோஸ் ஏற்றிக்கொண்டு வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலை அசோக் லைலாண்ட் சர்வீஸ் சென்டரை நெருங்கும்போது எதிர்பாராத விதமாக தூக்க கண்ணில் அங்குள்ள சாலையின் இடது புறம் பள்ளத்தில் விட்டார் லாரி கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ராமஞ்ஜன் அப்பா உயிரிழந்தார்
வண்டி சேதமடைந்தது ஏற்றி வந்த கோஸ்சுகளை பொதுமக்கள் வாரி சென்றனர் சம்பவத்தை அறிந்த வாலாஜா போலீசார் ராமஞ்ஜன் அப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.