செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : பாஜக பிரமுகர் கைது!!
மயிலாடுதுறை : சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப் படத்தை காண்பித்து பாலியல் சில்மிஷம் செய்த பாஜக நிர்வாகியை குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60). பாஜக நிர்வாகியான இவர் ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட 6 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து அதுபோல் தன்னிடம் பாலியல் சில்மிஷம் செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மகாலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.
குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.