இனி எந்த தப்பும் பண்ணமாட்டேன்” : பா.ஜ.க ரவுடி போலிஸில் பரபரப்பு மனு!


“திருந்தி வாழ போறேன்.. இனி எந்த தப்பும் பண்ணமாட்டேன்” : பா.ஜ.க ரவுடி போலிஸில் பரபரப்பு மனு!வட மாநிலங்களில் பின்பற்றிய இந்த நடைமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றி வருகிறது பா.ஜ.க. அந்தவகையில் வடசென்னையைச் சேர்ந்த ரவுடி கல்வெட்டு ரவி கடந்தாண்டு பா.ஜ.கவில் இணைந்தார்.

கல்வெட்டு ரவி மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 6 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலிஸாரால் தேடப்பட்டு வரும் ரவுடிகளின் பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் இருந்தவரான கல்வெட்டு ரவி, பா.ஜ.கவின் துணையோடு போலிஸில் இருந்து தப்பிக்கவே பா.ஜ.கவில் அடைக்கலமானதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கல்வெட்டு ரவி தான் திருந்தி வாழ விரும்புவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கல்வெட்டு ரவி அளித்துள்ள மனுவில் “திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க விரும்புகிறேன். என் மீதுள்ள வழக்குகளை ஆஜராகி நீதிமன்றத்தில் விடுதலை பெற்று கொள்கிறேன். எனது மகள்களின் எதிர்காலத்திற்காக வாழ விரும்புகிறேன். நான் இனி எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன்.

என் பெயரை யாரவாது தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவை சேர்ந்த ரவுடி மன்னிப்புக் கேட்டு போலிஸாரிடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image