கழிவு நீரையும் மாற்றுப்பாதையில் திருப்பிவிட மக்கள் கோரிக்கை


 வாலாஜா அடுத்த கடப்பேரி ஆதி திராவிட குடியிருப்பு பகுதியான   காமராஜர் தெரு பின்புறமுள்ள தனியார்,ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது

இதனைக் குறித்து அங்குள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்த போது அன்னை இந்திரா தெரு மற்றும் பெருமாள் கோயில் தெருவிலுள்ள  அனைத்து கழிவு நீர்களும் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தேங்கி நிற்கிறது 

இத்துடன் மழை நேரங்களில் வரும் தண்ணீரும் அதிகமாகி காமராஜர் தெருவில் வசிக்கும் வீடுகளுக்கு பின் புறம் புகுந்து விடுகிறது  இதனால் கொசு தொல்லை மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகளவில் தங்கும் இடமாக கடந்த பத்தாண்டுகளில் மாறிவிட்டது என்றனர் 

 இதனால் காமராஜர் தெருவில் வசிக்கும் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி ஆகியவைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி பெரும் சேதம் ஏற்படிருடக்கிறது. தற்போது கொரோனா என்னும் பெறுந்தொற்று அதிகமாக உள்ளதால் இது போன்ற கழிவு நீரால் துர்நாற்றத்துடன் தொடுதலை கடும் அவதிப்பட்டு வருகின்றோம் என்கின்றனர்

 மேலும் இதை விட வேதணைக்குறியது என்னவென்றால் இந்த கழிவு நீரினால் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி பன்றிகள் வீட்டிற்க்குள் வந்து சக மணிதர்களைப்போல் குடும்பம் நடத்துகிறது இதை பல முறை ஊராட்சி செயலாளர்  சங்கரிடமும்,  கிராம சபை கூட்டங்களில் பங்கு பெறும் அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் பார்க்கலாம் என்று கூறுகிறார்களே தவிர அது அப்படியே கிடப்பில் உள்ளது

 மேலும் ஊராட்சி செயலாளர் கடப்பேரி ஆதி திராவிட பகுதியில் வசிக்கும் மக்கள் 100 நாள் வேலைக்கு சென்றால் அந்த கிராம மக்களை உங்கள் காலனியில் இருப்பவர்களுக்கு போனால் போகட்டும் என்று வேலை கொடுக்கிறேன் அதிகமாக பேசினால் உங்கள் ஏரி வேலை அடையாள அட்டைகளை கேன்சல் செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார் மேலும் 100 நாள் வேளையில் பல முறைகேடுகள் நடப்பதாகவும் கூறுகின்றனர் இவரின் ஆணவ போக்கும் அராஜகமும் தாங்கமுடியவில்லை 

எனவே இந்த கழிவு நீரை மாற்று பாதையில்  திருப்பி விட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்