தன் நண்பரிடம் பணம் வாங்கி வருவதாக சொல்லி சென்ற வடநாட்டை சேர்ந்த வாலிபர் காணவில்லை..
வடநாடு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நசுருதீன் சகா என்பவரின் மகன்கள் இஸ்மாயில் ஷா வயது 30 என்பவரும் இவருடைய அண்ணன் இஸ்ரேல் சகா 34 என்பவரும் காவேரிப்பாக்கம் அமீர் தெருவில் தங்கி பல்வேறு ஓட்டல்களில் வேலைப்பார்த்து இறுதியாக காவேரி பக்கத்திலுள்ள ஜோதி மெஸ்ஸில் வேலை பார்த்து வந்தனர் இந்த நிலையில் கடந்த 18.07.21ஆம் தேதி சுமார் 3 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னையிலுள்ள பல்லாவரத்திற்க்கு சென்று
தன்னுடைய நண்பரை பார்த்து பணம் வாங்கி வருவதாக சொல்லி சென்றவர் இதுநாள்வரையில் காவேரிபாக்கத்திற்கு திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காணாமல் போன இஸ்ரேல் சாகாவின் தம்பி ஸ்மைல் சகா காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சீதாவிடம் புகார் மனு அளித்தார் மனுவைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.