ஆற்காடு அடுத்த வேப்பூர் பைபாஸ் சாலையில் லாரியும் இருசக்கர வாகனமும் முந்த முயன்ற தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பைபாஸ் சாலையில் லாரியும் டூவீலரும் முந்த முயன்ற தகராறில் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து ஆற்காடு நாதமுனி தெருவை சேர்ந்த மணிகண்டன் (28), ஆற்காடு தோப்புகானா பகுதியை சேர்ந்த அருண் (21) ஆகிய இருவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். அருண் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா மற்றும் ஆற்காடு டவுன் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரி டிரைவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.