தமிழக மக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க திமுக தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

 


தமிழ்நாடு முழுவதும் பொது சுகாதாரத் துறை சார்பாக  கொரோனா இலவச தடுப்பூசி போடும் முகாம்களை அமைத்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை சார்பாக அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  தடுப்பூசி முகாம்கள் அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டு வருகின்றனர் 

கடந்த ஜனவரி 16ம் தேதி வாலாஜா தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி  தொடங்கியது தினமும் மக்கள் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருவதால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல்  கூட்ட நெரிசல்  அதிகரித்து  வருவதை கருத்தில் கொண்டு

மக்களின் நலன் கருதி தொற்று மேலும் பரவாமல் இருக்க தலைமை மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனை அருகிலுள்ள  வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. 

இதனால் மக்கள் சிரமமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்கின்றனர்.வாலாஜா தலைமை அரசு மருத்துவர் உஷா நந்தினி மருத்துவர் கீர்த்தி மருத்துவர் கோபாலகிருஷ்ணன் அறிவிப்பின்படி  இதுவரையில் 20,619 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்  சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மருத்துவர்களின் பணியை பாராட்டி வருகின்றனர்.