பூட்டுத்தாக்கு கிராமத்தில் தெருக்களில் மழை நீர் தேக்கத்தால் அவதிப்பட்டு வரும் மக்கள் சரி செய்து தர கோரிக்கை

 



வாலாஜா அடுத்த பூட்டுத்தாக்கு கிராமத்தில் இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் கனமழையால் 

கீழ்யாண்டை தெருவில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு கூட மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்

 தெருவில் நடக்க முடியாமல் தண்ணீர் தேங்கி நிற்கிறது தெருக்கள் முழுவதும் குண்டும் குழியுமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி தெருவே நாற்றம் எடுத்து வருகின்றது

 இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்த போது பல ஆண்டுகளாகவே பூட்டுத்தாக்கு கீழ்யாண்டைத்தெரு சிமெண்ட் சாலை சீரமைக்க படாமல் கரடு முரடாக இருந்து வருகின்றது  மழை நேரங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி இரண்டு வாரம் அல்லது மூன்று வாரம் அப்படியே தேங்கி நிற்கிறது 

 தண்ணீரில் பாம்புகள், தவளை, விஷப்பூச்சிகள், வீட்டிற்க்குள் ஏறி வந்து விடுகிறது தண்ணீர் தேக்கத்தால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வீட்டிற்குள் நிம்மதியாகப் படுத்து உறங்க முடியவில்லை

 இதனால் மலேரியா, டைபாய்டு காய்ச்சலால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம் தண்ணீர் தேங்காமல்  இருக்க , கால்வாய்  கட்டி தண்ணீர் வெளியேற எங்கள் கிராமத்து பஞ்சாயத்து கிளார்க் வாசுவிடம் பலமுறை சொல்லியும், இதுநாள் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,

 பஞ்சாயத்து மூலமாக வரும் வருமானத்தை சம்பாதிப்பதற்கு குறியாய்  இருக்கிறாரே  தவிர, மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை இவர் கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் செய்வதில்லை,

 தூய்மைப் பணியாளர்கள் படுமோசம், எந்த வேலையும் செய்வது கிடையாது  மேலும் அவர்கள் கூரிய போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து  கால்வாய் கட்டி எங்கள் தெருவை சீரமைத்து தர முன்வர வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்