பெண்ணை சிதைத்த முதியவர்.. 9 மாதம் கர்ப்பம் : கிறிஸ்துவ காப்பகத்தில் அரங்கேறிய கொடுமை!!

 


கிறிஸ்தவ காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 67வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே கிறிஸ்தவ சேவா சங்கத்தின் கட்டண காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை ஏழு முறை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய முதியவர், கற்பழிப்பை மறைக்க உடல்நல கோளாறு என்று நாடகமாடிய கொடுமை அரங்கேறி உள்ளது.

மதுரை மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கென்னட் அறக்கட்டளைக்கு சொந்தமான கிறிஸ்தவ சேவா சங்கம் என்ற ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான கட்டண காப்பகம் இயங்கி வருகிறது.

இந்த காப்பகத்தை கடந்த 21 வருடமாக ராஜசேகர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு நடத்தி வருகின்றது. இந்த காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக அவரது தாய்மாமன் மற்றும் அந்தப் பெண்ணின் சகோதரர் ஆகியோர் கொண்டுவந்து சேர்த்தனர்.

தாய் தந்தை இருவரும் இறந்து போனதால் கவனிப்பின்றி தவித்த மனவளர்ச்சி குன்றிய தனது தங்கையை இந்த காப்பகத்தில் சேர்த்த சகோதரர் ஓட்டலில் வேலை பார்த்து மாதந்தோறும் ரூ.1500 கட்டணம் செலுத்தி பராமரித்து வந்தார்.

இவர்களுக்கு தாய்மாமன் பக்கபலமாக இருந்துள்ளார். வருடத்திற்கு இரு நாட்கள் மட்டும் அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்தப் பெண்ணின் சகோதரர் மற்றும் தாய் மாமாவை அழைத்த காப்பக நிர்வாகி இராஜசேகரன், உங்கள் பெண்ணுக்கு உடலில் ஏதோ மாற்றம் காணப்படுகின்றது.

சாப்பிட்டால் வயிறு ஊதுவதால் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அவர்களும் முறையாக காப்பகத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டில் உள்ள பெண்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டதில் அந்தப் பெண் 9 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போன அந்தப் பெண்ணின் சகோதரர், மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

புகாரின் அடிப்படையில் காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டதில் பல வருடங்களாக அங்கு வேலை பார்த்து வந்த 67 வயதான ஊழியர் ஜீவநேசன் என்பவர்தான கர்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.
மேலும் அந்த நபர் அந்த காப்பகத்திலிருந்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

அந்த 67 வயது முதியவர் பெண்ணை கவனித்துக் கொள்வதாக கூறி அந்த காப்பகத்தின் தோட்டத்து பகுதிக்கு அழைத்துச் சென்று யாரும் இல்லாத சூழ்நிலையை கருத்தில் வைத்து சுமார் ஏழு முறை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த காம கொடூரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காப்பக நிர்வாகிகள் 10 பேரிடமும் மற்றும் காப்பதக ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)