ரூ.84 லட்சம் மோசடி செய்த ஆடிட்டர் கடத்தல்... சென்னையில் பரபரப்பு

 


தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா(49). இவர் சென்னை வடபழனி பஜனை கோவில் தெருவில் தனது குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி இரவு தனது கார் ஓட்டுனருடன் எழும்பூர் கென்னட் சந்து-ல் உள்ள லட்சுமி மோகன் லாட்ஜிக்கு சில நபரகளை சந்திக்க வேண்டி உள்ளதாக சொல்லி சென்றுள்ளார். சரியாக இரவு 11 மணியளவில் ராஜா சந்திப்பாக சொன்ன ஆட்களுக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டு ஆடிட்டர் ராஜாவை அவர்கள் காரில் அடித்து கடத்திக் சென்றுள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் கார் ஓட்டுனர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் லாட்ஜில் தங்கியிருந்தது விருதாச்சலத்தை சேர்ந்த குமார்(46), விழுப்புரத்தை சேர்ந்த அலெக்ஸ், பண்ருட்டியைச் சேர்ந்த கில்லிவளவன்(31), கடலூரைச் சேர்ந்த சுதர்சன்(35), சிதம்பரத்தை சேர்ந்த சிவபாலன் (43), திருவண்ணாமலையை சேர்ந்த ராமமூர்த்தி(51) ஆகிய 6 நபர்கள் என தெரியவந்தது.

போலீசார் ராஜாவின் செல்போன் எண்ணை சோதனை செய்தபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை ஆடிட்டர் ராஜாவின் செல்போன் ஆன் ஆகியுள்ளது. இந்த நேரத்தில் எழும்பூர் போலீசார் அவருக்கு கால் செய்து கடத்திய நபர்களிடம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் காவல் நிலையம் வாருங்கள் எனவும் தங்களின் விவரங்கள் அனைத்தும் தெரிந்துவிட்டது எனவும் மீறினால் வேறு மாதிரியான நடவடிக்கை எடுப்போம் என்க்கூறியுள்ளனர்.

இதனால் பயந்து போன அவர்கள் தாங்களே எழும்பூர் காவல் நிலையம் வருவதாக கூறி பின்னர் நேற்று மாலை காவல் நிலையம் வந்துள்ளனர். இவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்வாரிய துறை மற்றும் அரசு பொதுப்பணி துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2018 ம் ஆண்டு அவர்களிடமிருந்து ஆடிட்டர் ராஜா ரூ.80 லட்சம்  வாங்கி கொண்டு பல மாதங்களாக வேலையும் வாங்கி தராமலும்வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனால் இவர்கள் பலமுறை சென்னை வந்து கேட்டபோதெல்லாம் ஆடிட்டர் ராஜா இவர்களை கண்டுகொள்ளாமல் அலைகழித்து வந்ததும் இந்தநிலையில் நேற்று முன் தினம் எழும்பூரில் உள்ள குறிப்பிட்ட லாட்ஜூக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதன் பேரில் ஆறு நபர்களும் லாட்ஜூக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜாவுக்கும் இவர்களுக்கும் பிரச்சினை எழ ஆறு நபர்களும் ஆடிட்டர் ராஜாவை கடத்தி கடலூர் கொண்டு சென்றது தெரியவந்தது.

அதே போல ராஜாவிடம் நடைபெற்ற விசாரணையில் இவர் சென்னையில் சில சிறிய நிறுவனங்களில் கணக்கு வழக்குகள் பார்த்து வருவதும், இதனால் தன்னை இவர் ஆடிட்டர் எனக்கூறியும் தனக்கு அரசு உயரதிகாரிகள் பலர் நெருக்கமாக இருப்பதாகவும் கூறி ராஜா மோசடியில் ஈடுப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ராஜாவை கடத்திய ஆறு நபர்கள் மீதும் கலகம் செய்தல், ஆட்கடத்தல், கடத்தி சிறைவைத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல ராஜா மீது மோசடிப் பிரிவில் வழக்கு பதிவு செய்து எழும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்