கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பல்லூர் பகுதியில் கடந்த மாதம் கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.


நெமிலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட   பள்ளூர் கிராமத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி நண்பர்களுடன் மது அருந்த சென்ற கௌதம் என்ற 28 வயது வாலிபரை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய அதே கிராமத்தைச் சேர்ந்த நிஷாந்த் வயது 20, பாரிவேந்தன் வயது 23, அப்பு  தீனா வயது20, பகத்சிங் வயது25, திலீப் வயது 23, சரத்குமார் வயது 25, விஜயகுமார் வயது24 ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 

மேலும் அவர்களை   குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்க  மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.