600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!

 


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள். இருவரும் தொழிலதிபர்கள். இவர்களில், கணேஷ் பா.ஜ.க வர்த்தகப் பிரிவில் பொறுப்பு வகிக்கிறார். பா.ஜ.க தலைவர்கள் எல்.முருகன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் கணேஷ் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளனர்.

கணேஷ்- சுவாமிநாதன் இணைந்து கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்கள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.


கும்பகோணத்தில் பைனான்ஸ் நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில், பா.ஜ.கவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலிஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள். இருவரும் தொழிலதிபர்கள். இதில், கணேஷ் பா.ஜ.க வர்த்தகப் பிரிவில் பொறுப்பில் உள்ளார்.


இவர்கள் இருவரும் சேர்ந்து கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை வைத்துள்ளதால், `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், கணேஷின் மகன் அர்ஜுனின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது, ஹெலிகாப்டரிலிருந்து பூக்களைத் தூவி அப்பகுதி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில், முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்து, செல்வந்தர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர். இதற்காக ஏஜென்ட்களை நியமித்து அவர்களுக்கு கமிஷன் கொடுத்து வந்தனர்.

இதில் பலரும் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய நிலையில், கொரோனாவை காரணம் காட்டிய கணேஷ்- சுவாமிநாதன் பிரதர்ஸ், பணத்தை செலுத்தியவர்களுக்கு முறையாக பணம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த

மேலும், ‘ஆம்புலன்ஸ் சேவைக்கும், சுற்றுலா செல்லவும் ஹெலிகாப்டர் வாடகைக்குக் கிடைக்கும்’ என நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து, ‘அர்ஜுன் ஏவியேஷன்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களையும் வைத்து, அப்பகுதியினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளனர்.

கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள். பா.ஜ.க வை சேர்ந்த இருவரும் நிதி நிறுவனம் என்ற பெயரில் பொதுமக்கள் ஏராளமானோரிடம் , பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ₹600 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கும்பகோணம் ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியினர், தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்யிடம் கடந்த வாரம், கணேஷ்- சுவாமிநாதன் ஆகியோர் சுமார் 15 கோடி வரை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தனர். பைரோஜ் பானு கொடுத்த புகாரில் மாவட்ட குற்றப் பிரிவு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையே, கும்பகோணம் நகர் முழுவதும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்திய நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களை ஏமாற்றி ரூ.600 கோடி மோசடி செய்ததாக பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர் புகார்களை அடுத்து, டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார் தலைமையிலான தனிப்படை போலிசார், நேற்று முன்தினம் இரவு கணேஷ்- சுவாமிநாதன் நிறுவனத்தில் பணியாற்றும் மேனேஜர்களை பிடித்து விசாரித்தனர். இதில், மேனேஜராக பணியாற்றும் ஸ்ரீகாந்தன் என்பவரை கைது செய்தனர்.

மேலும், நேற்று காலை கணேஷ் வீட்டில் போலிஸாஅர் சோதனை நடத்தினர். இந்நிலையில் கணேஷ் - சுவாமிநாதன், ரகுநாதன், மீரா உள்ளிட்ட நான்கு பேர் மீது 406,420, 120பி என மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


இந்நிலையில் திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகன் தலைமையில் எஸ்.பி தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான போலிஸார் ஸ்ரீநகர் காலனியில் உள்ள கணேஷ் - சுவாமிநாதன் வீட்டில் இருந்த 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)