மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்


 பக்ரீத் கொண்டாடத்தின் போது குர்பனிக்காக மாடுகள், ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இதையடுத்து அதிக அளவிலான கூட்டம் சேரும் பண்டிகை மற்றும் திருவிழாவிற்கு பல மாநிலங்களில் தடை தொடர்கிறது. இந்நிலையில் இஸ்லாமியார்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் 50 பேருக்கு மேல் கூட கூடாது என்று முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். மேலும் குர்பானிக்காக மாடு மற்றும் ஒட்டகங்களை பலியிட கூடாது என்றும் அறிவித்துள்ளார்.

இதனிடையே கேரளாவில் பக்ரீத் பண்டியை முன்னிட்டு 19ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளது. கேரள அரசின் முடிவிற்கு இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு தொடர்பாக பதிலளிக்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!