வாலாஜா அடுத்த கடப்பேரி கிராமத்தில் பெரிய தெருவில் வசித்து வரும் சிவலிங்கம் மகன் தர்மலிங்கம் வயது 32 என்பவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்

 


இவருக்கும், மீனா என்பவருக்கும் திருமணமாகி பத்தாண்டுகள் முடிந்த நிலையில்  இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்  தர்மலிங்கம்  தனது மனைவி மீனா வயது 28 என்பவரின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்த நிலையில்

 02, 06,2021 நள்ளிரவு  இருவருக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டு கோபத்தில்  உச்சத்தில் சென்ற தர்மலிங்கம் தனது மனைவி மீனாவை ஊதாங்குழலால் தலையில் பின்புறம் மற்றும் முகம் ஆகிய இடங்களில் பலமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த மீனாவை உறவினர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்

 அங்கிருந்து விசாரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேஎச் அப்போலோ, மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்து மீண்டும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து புகாரை பெற்றுக்கொண்ட காவேரிப்பாக்கம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.